
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் தொடங்கியது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 83 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 67 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.