
கேப் வெர்டே தீவின் போகோ பகுதியில் சுற்றுலா முடிந்து திரும்பிய பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
சோபிலிபே நகருக்கு அருகில் நடந்த இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பாறைகள் நிறைந்த ஆழமான பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.