
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியால் கிடைத்த பொருளாதாரப் பலனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தைவான் அரசு மக்களுக்கு தலா ரூ.30,000 (NT$10,000) வழங்க அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 2027-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 70,846 கோடி ரூபாய் (NT$235.7 பில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தைவான் பொருளாதாரம் 14.15% வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த உதவித்தொகை கல்வி மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற தேவைகளுக்குப் பயன்படும் என அரசு தெரிவித்துள்ளது.