
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் மார்க் சாப்மேன் மற்றும் ஜாக் பால்க்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.
காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ஜோஷ் கிளார்க்சன் மற்றும் பிளேர் டிக்னர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகள் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளன.