
பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளி படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் 'சியாங் யாங் ஹாங் 10' ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், 7 நீர்மூழ்கிச் சோதனைகள் மூலம் இந்த கனிம படுகை கண்டறியப்பட்டுள்ளது.
நிலப்பரப்பில் உள்ள பல சுரங்கங்களைவிட இதில் கனிமங்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இது வணிகரீதியாக மிகப்பெரிய மதிப்புடையதாகக் கருதப்படுகிறது.