
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் அணி குவிண்டன் டிகாக்கின் 106 ரன்களுடன் 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது.
218 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஜான்சன் ஜார்லஸின் 78 ரன்கள் உதவியுடன் 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.