International
காங்கோ பள்ளிகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி

காங்கோ பள்ளிகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி

maalaimalar2h
THE BRIEF
1

கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே இருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 மாணவிகள் மற்றும் 7 மாணவர்கள் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் மேலும் 29 பேர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக M23 கிளர்ச்சிக் குழுவின் செய்தி தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா தெரிவித்துள்ளார்.

3

மரத்தால் ஆன வீடுகள் நிறைந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.