
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பவார் மற்றும் பிரியா கங்காஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி தலா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
54 கிலோ எடைப்பிரிவில் பிரீத்தி வட அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை 5-0 என்ற கணக்கிலும், 60 கிலோ பிரிவில் பிரியா ஸ்காட்லாந்தின் நியாமி மிட்செல்லை 4-1 என்ற கணக்கிலும் வீழ்த்தினர்.
ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி, தனது அரையிறுதிப் போட்டியில் ஜாம்பியாவின் கேத்தரின் ம்வாபேயை எதிர்கொள்ள உள்ளார்.