ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டன் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 477 ரன்களை 166.20 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து சிறப்பாக செயல்பட்ட சாம்சன், கேப்டன் பொறுப்புடன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையை தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் கோரியுள்ளார்.
கேப்டன் பதவியில் ருதுராஜ் கெய்க்வாட்டே தொடர்வார் என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக உள்ள நிலையில், சாம்சனை சமாதானப்படுத்தும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.