/polimer-news/media/media_files/2026/09/12/dhoni-2026-09-12-17-10-09.jpg)
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி அணியில் 25 சதவீத பங்குகளை கேட்டதாகவும், பின்னர் 20 சதவீதமாக குறைத்ததாகவும் வெளியான தகவலை CSK நிர்வாகம் மறுத்துள்ளது.
தோனி இதுகுறித்து எங்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை என்றும், இது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் CSK-வின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை IPL சாம்பியனான CSK அணியின் மதிப்பு மற்றும் தோனி பங்கு கோரியதாக பரவிய தகவல் நம்பத்தகாதது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.