தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என யாரும் தடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூலை 9-ம் தேதி அறிவிப்பாணைப்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.