
தமிழக அரசின் 'சிப்காட்' தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
2025-26ஆம் ஆண்டில் சிப்காட் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,028 கோடியாகவும், செலவுகள் ரூ.1,674 கோடியாகவும் இருந்த நிலையில், நிகர லாபம் ரூ.267.38 கோடியாக உயர்ந்துள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் புதிய தொழில் பூங்காக்களில் மனைகள் குத்தகைக்கு வழங்கப்பட்டதே இந்த லாப உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.