
கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் 7 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2021-ல் 15 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், 2025-ல் 104 ஆக உயர்ந்துள்ளது; மொத்தம் 36 நாடுகளில் 302 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் 33, ஐக்கிய அரபு அமீரகத்தில் 32, இங்கிலாந்தில் 31 மற்றும் கனடாவில் 30 தாக்குதல்கள் என அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.