
த.வெ.க. அரசு உதயநிதியைக் கைது செய்துள்ளதை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் த.வெ.க. அரசின் தோல்வியை மறைக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை உதயநிதி அம்பலப்படுத்தியதே இந்த கைதுக்குக் காரணம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.