
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான ஆப்பிள் ஆபரேஷன்ஸ் இந்தியா நடப்பு நிதியாண்டில் மென்பொருள் மேம்பாட்டு துறை மூலம் மட்டும் 650 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 1,400 கோடியைக் கடந்துள்ளதுடன், நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து 103 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்திய ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச மென்பொருள் அமைப்புகள் மற்றும் திட்ட மேலாண்மை பணிகளில் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர்.