
அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறப்படும் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததால், அவர்களின் ராஜினாமா விசாரணை சம்பிரதாயமாகவே நடந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சபாநாயகர் தரப்பில், எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன் ராஜினாமா செய்ததால் அதை ஏற்காமல் இருக்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.