
பெரியார், அண்ணா, கலைஞரை விட்டுவிட்டு திருமாவளவனை அரசியல் ஆசான் என உதயநிதி ஸ்டாலின் கூறியதை ஏற்க முடியாது என டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
மாஞ்சோலை மற்றும் மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதைக் கண்டித்து, செப்டம்பர் 12-ல் மதுரையில் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
த.வெ.க. அரசு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி, செப்டம்பர் 11-ல் புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.