
கர்நாடகாவின் கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடியில் 2,281 அடியை எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உபரி நீர் இன்று அல்லது நாளைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.