
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளி ராம்குமாரின் மூன்று மகன்களும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், இரட்டையர்களான அருண் மற்றும் தரண் முறையே திருநெல்வேலி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிகளிலும் சேர உள்ளனர்.
பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த மூன்று சகோதரர்களும் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளனர்.