இந்தியாவில் வங்கிகள் வழங்கிய தங்க நகைக்கடன் 2026-ம் ஆண்டில் ரூ.14,63,118 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ல் ரூ.6,15,341 கோடியாக இருந்த நகைக்கடன், 2024-ல் ரூ.7,73,248 கோடியாக அதிகரித்து, தற்போது பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மட்டும் ரூ.11,30,940 கோடி நகைக்கடன்களை வழங்கியுள்ள நிலையில், ஏல நடைமுறைகளில் வாடிக்கையாளர் உரிமைகளைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.