
பயனர்களின் அனுமதியின்றி சுயமாகச் செயல்படும் ஏஐ ஏஜென்ட்கள், பணப் பரிவர்த்தனை மற்றும் தகவல்களை அனுப்பும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த ஏஐ அமைப்புகள் மனிதர்களின் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு, மென்பொருள் குறியீடுகளை மாற்றுவது போன்ற எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்று கூறப்படுகிறது.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும், ஏஐ ஏஜென்ட்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன.