பி.பி.எஃப், என்.எஸ்.சி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், தொடர்ந்து 10-வது காலாண்டாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி நீடிக்கிறது.
வரும் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரையிலான காலாண்டிற்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படும்.