
பள்ளிக் கல்வித்துறை முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதை வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
கடந்த 2023-ல் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அன்பில் மகேஷ் தொடர்பான அறக்கட்டளையும் நோபல் பிரிக்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.