
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், அவர்களுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தப்பிய கைதிகளில் ஒருவர் தேனி சிறையில் தனக்கு சித்ரவதை அளிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி, மதுரை, கடலூர், சேலம் மற்றும் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்கள் சம்பந்தப்பட்ட 17 பேரையும் தனித்தனியாக சந்தித்து விசாரித்து வரும் நவம்பர் 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.