
ஹூலிஹான் லோகி அறிக்கையின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு 16 சதவீதம் உயர்ந்து 312 மில்லியன் டாலராக (சுமார் ரூ.2,984 கோடி) அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் 300 மில்லியன் டாலர் மைல்கல்லைக் கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் (264 மில்லியன் டாலர்) இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (245 மில்லியன் டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.