
தமிழகத்தில் நிலவும் சீரற்ற மின் வினியோகம் மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூலை 14 அன்று மின் தேவை 21,724 மெகாவாட்டாக உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது 20,000 மெகாவாட்டாக உள்ளது.
மின் அழுத்த மாறுபாடுகளால் அதிநவீன இயந்திரங்கள் பழுதாகி நஷ்டத்தை சந்திப்பதாக டான்ஸ்டியா மற்றும் கோவை மாவட்ட தொழில் அமைப்புகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.