
கொசோவோ நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க அவகாசம் கேட்ட இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது, எதிர்க்கட்சி எம்.பி. முட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜூன் மாத தேர்தலுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அலையன்ஸ் கட்சியைச் சேர்ந்த டைம் காத்ரிஜாஜ் என்ற பெண் எம்.பி. பிரதமரை நோக்கி முட்டைகளை வீசி 'அவமானம்' என முழக்கமிட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த எம்.பி.யை அவையிலிருந்து அப்புறப்படுத்தினர்.