
வித்யுத் ஜம்வால் தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் ஆக்ஷன் படமான 'ஸ்ட்ரீட் பைட்டர்' அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள இப்படம் 1993-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, உலகப் புகழ்பெற்ற 'வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்' போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.