
பெங்களூருவில் நடைபெறும் 4-வது குளோபல் செஸ் லீக் போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அலாஸ்கன் நைட்ஸ் அணி 6-11 என்ற கணக்கில் திரிவேணி கான்டினென்டல் கிங்சிடம் தோல்வியடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் தலைமையிலான அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 15-3 என்ற கணக்கில் அமெரிக்கன் கேம்பிட்சை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
அலாஸ்கன் நைட்ஸ் அணியின் அர்ஜூன் எரிகைசி, யாஜிஸ் கான் மற்றும் நினோ பேட்சி யாஷ்விலி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், ஆனந்த்-அலிரெஜா இடையிலான ஆட்டம் 59-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.