
சீன தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங்கை 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தன்வி ஷர்மா அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடை ஒகிமோட்டாவிடம் 12-21, 10-21 என்ற நேர்செட்டில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
தைபேய் சிட்டியில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், தன்வி ஷர்மா தனது அடுத்த சுற்றில் வெற்றி பெற போராட உள்ளார்.