
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான மிகக் கடினமான டெகத்லான் போட்டியில் அவர் மொத்தம் 7,934 புள்ளிகள் குவித்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இவர், தற்போது நகோயாவிலும் பதக்கம் வென்று தொடர்ந்து 2-வது முறையாக மேடையேறியுள்ளார்.