
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள், ஜூன் 2026 முதல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு அரசாணைப்படி ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படும் தற்போதைய நிலையை மாற்றி, ஒவ்வொரு மாதமும் உரிய காலத்தில் ஊதியம் வழங்க நிரந்தர நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.