
நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் முன்கள வீரர் அபிஷேக் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் பதிவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியது, இந்தியா அடுத்த சுற்றில் இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜெண்டினா/நியூஸிலாந்து அணியை சந்திக்க உள்ளது.