வருமான வரித்துறை விதிகளின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் மற்றும் ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதி உண்டு.
இந்த வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள், அதற்கான முறையான பில் அல்லது வருமான ஆதாரத்தை சமர்ப்பித்தால் எவ்வித சிக்கலும் இன்றி வைத்திருக்க முடியும்.
தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளுக்கு முறையான ஆவணங்கள் அவசியம் என்றும், பாரம்பரிய சொத்தாகக் கிடைத்த தங்கத்திற்கு உரிய பரிசளிப்பு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.