
தமிழ்நாட்டில் குரூப்-4 தேர்வின் மூலம் 6,574 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நவம்பர் 5ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த விண்ணப்பக் காலமானது, அரசுப் பணிகளுக்கான வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்ட அரசாணையை அடுத்து நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், எழுத்துத் தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.