
ஈரான் எல்லை மூடப்பட்டதால் பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 12 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் - ஈரான் இடையிலான காப்ட் - ரிம்தான் மற்றும் டஃப்தான் எல்லைச் சோதனைச் சாவடிகள் கடந்த 17-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளதால், நாள்தோறும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜி விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
விநியோகத் தடைகள் நீடித்தால் விலை மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப் பிரச்சினைகள் குறித்துப் பேச பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி டெஹ்ரானுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.