/nakkheeran/media/media_files/2026/10/24/schoolstudents-2026-10-24-07-47-59.jpg)
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகத் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.