
முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓமந்தூரார் வளாகத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து முறை முதல்வர், 13 முறை எம்.எல்.ஏ என 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கலைஞரின் சாதனைகளை ஸ்டாலின் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தார்.