
தமிழகத்தில் நேற்று காலை சவரனுக்கு 600 ரூபாய் குறைந்த தங்கம் விலை, மாலையில் 1,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,18,400 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று காலை 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மாலை நிலவரப்படி ஒரு கிராம் 14,800 ரூபாயாக உயர்ந்தது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது, ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.