
தமிழகப் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
1 முதல் 10-ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகளும், 11-12-ஆம் வகுப்புகளுக்கு 2 உடற்கல்வி வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
விளையாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அமைச்சர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.