
செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாக அமல்படுத்த வேண்டும் மற்றும் ஓய்வூதிய பலன்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் பணப் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை மற்றும் கடன் தொடர்பான பணிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.