
வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்க மாநில அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி 3 கிலோவாட் மின்சார உற்பத்தித்திறனுக்கு மேலே மத்திய அரசு மானியத்துடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மாநில அரசு மானியம் அறிவிக்கப்பட்ட 10 நாட்களிலேயே வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.