
உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, நடுக்கடலில் சர்பிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தின் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பட்டப்படிப்பை முடித்துள்ள இன்பநிதி, தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கவனித்து வருகிறார்.
தந்தையைப் போலவே தயாரிப்பாளராகத் தொடங்கி, விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இன்பநிதி தீவிர நடிப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.