
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 13 வயது ஆஷ்ரிதா காசா மற்றும் அவரது சகோதரர் அனிஷ், 'பீட்சா ஃபார் பர்பஸ்' என்ற செயலியை உருவாக்கி 25,000 பீட்சாக்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.
இந்த செயலி மூலம் நன்கொடையாளர்கள் அருகில் உள்ள உணவகங்கள் வழியாகப் பசியால் வாடும் குடும்பங்களுக்கு உணவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 5 கோடி மக்கள் உணவின்றி தவிப்பதாகக் கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டம் பலருக்கு உதவியுள்ளது.