
தஞ்சாவூரில் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரராஜ் (61) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை திவ்யா (38) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியின் குடும்பச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, பண உதவி செய்வதாகக் கூறி சண்முகசுந்தரராஜை அறிமுகப்படுத்தி, கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.