
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் நாளை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் அணி தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.