
தரமான காணொளிகளை உருவாக்க ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் ஸ்டுடியோ தேவையின்றி, வெறும் உரையை உள்ளீடாகக் கொடுத்தாலே மனிதர்கள் பேசுவது போன்ற தத்ரூபக் காணொளிகளை 'Synthesia' என்னும் ஏஐ தளம் உருவாக்குகிறது.
இத்தளத்தில் 200-க்கும் மேற்பட்ட மெய்நிகர் மனித உருவங்கள் (AI Avatars) உள்ளதோடு, பயனர்கள் அளிக்கும் ஒரே உரையை தமிழ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பேசவைக்கும் வசதியும் உள்ளது.
நிறுவனத் தலைவர்கள் தங்கள் சொந்தக் குரலையும் தோற்றத்தையும் பதிவு செய்து தனித்துவமான உருவங்களை உருவாக்கிக் கொள்ளவும், ஆழ்மாறாட்டம் போன்ற தவறுகளைத் தவிர்க்கக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் இது உதவுகிறது.