
மெக்காய் மைதானத்தில் வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில், போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது மிகக் குறைந்த பந்துகளில் (750 பந்துகள்) முடிந்த போட்டியாக இது பதிவாகியுள்ளது.
இந்தியாவில் ஆடுகளங்கள் குறித்து விமர்சிக்கும் ஐசிசி, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது இரட்டை நிலைப்பாடு என கவாஸ்கர் சாடியுள்ளார்.