
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் நிலவிய கடும் வெப்ப அலையால், வழக்கமான இறப்பு எண்ணிக்கையை விட சுமார் 16,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற வடக்கு ஐரோப்பிய நாடுகள், தெற்கு ஐரோப்பாவை விட வெப்பத்தை எதிர்கொள்ளும் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்ததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக மோசமான வெப்ப அலை மரண விகிதம் இதுவென பெல்ஜியம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், காலநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.