
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய செயலி மற்றும் இணையதளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
நுகர்வோர் தங்களுக்கு அருகிலுள்ள கடையைத் தேர்வு செய்து, மொபைல் எண் மூலம் ஓடிபி பெற்று பணம் செலுத்தி கியூஆர் குறியீடு கொண்ட ரசீதைப் பெற வேண்டும்.
இந்தத் திட்டத்தால் மது புழக்கம் அதிகரிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது.